» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 10பேர் டிஸ்சார்ஜ் : மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர்

ஞாயிறு 31, மே 2020 3:05:27 PM (IST)



தூத்துக்குடியில் கரோனா வார்டில் இன்று 10பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்சமயம் 86 நபர்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 நபர்கள் இன்று நோயிலிருந்து முற்றிலும் குணமாகி அவர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவ துறை தலைமை மருத்துவர் இளங்கோ, உறைவிடம் மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வழி அனுப்பி வைத்தனர்.  மதியம் 2 மணி நிலவரப்படி தற்சமயம் 86 நபர்கள் கரோனா நோய் தொற்றுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications








Thoothukudi Business Directory