» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொடூர கொலை : தூத்துக்குடி அருகே பதற்றம் - போலீஸ் குவிப்பு

சனி 30, மே 2020 8:22:40 AM (IST)ஆத்தூர் அருகே தூத்துக்குடி கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 20) தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் அப்பகுதியில் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பத்திரகாளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இதனிடையே அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கைது செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். கொலை செய்யப்பட்ட மாணவரின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலை துண்டிக்கப்பட்ட மாணவரின் தலையை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. தலைவன் வடலி கிராமத்தில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து

M.sundaramமே 30, 2020 - 06:54:30 PM | Posted IP 108.1*****

Nowadays many clashes are taking place in villages. In olden days village peoples are abiding the rules enacted by the seniors of their villages. It is advocated by the then President of India. Disputes are solved at the village meeting. They do not give chance to the police to enter in their village. People go the court very rare. Now the environment has been changed. Therefore there is no peace in village also.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory