» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் என நினைத்து கிருமிநாசினி குடித்தவர் சாவு : கோவில்பட்டி அருகே பரிதாபம்

சனி 30, மே 2020 8:10:43 AM (IST)

கோவில்பட்டி அருகே குடிநீர் என நினைத்து, கிருமிநாசினியை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்தநகரைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் மகாராஜன் (42). கட்டிட தொழிலாளியான இவர் கோவில்பட்டியை அடுத்த செண்பகபேரியில் உள்ள கோழிப் பண்ணையில் கட்டிட பணிக்கு அவ்வப்போது சென்று வந்தார். இந்நிலையில் மகாராஜன் நேற்று அந்த கோழிப்பண்ணைக்கு சென்றார். அங்கு கோழிப் பண்ணையில் தெளிப்பதற்காக கிருமிநாசினியை பாட்டிலில் வைத்து இருந்தனர். அதனை தண்ணீர் என நினைத்து மகாராஜன் குடித்து விட்டார்.

இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகாராஜனை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory