» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

வெள்ளி 29, மே 2020 8:03:01 PM (IST)

முறப்பநாடு அருகே ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலியாவூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் ஆறுமுகம் (49). இவர் கடந்த 16.02.2020 அன்று கலியாவூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக ஆற்று மணல் திருடியுள்ளார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். 

அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபன் ஆறுமுகத்தை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications






Black Forest Cakes



Thoothukudi Business Directory