» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா பாதிப்பிலிருந்து 23 பேர் குணம் அடைந்தனர் : வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

வெள்ளி 29, மே 2020 7:29:41 PM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று 23 பேர் வீடு திரும்பினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இன்று மாலை 23 பேர் முழுவதும் குணமடைந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.  அவர்களை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா்  தொடா்ந்து 14 நாள்களுக்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினா். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் உறைவிட மருத்துவர் மருத்துவத்துறை பேராசிரியர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், பங்கேற்றார்கள் .

மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் மாத்திரை மற்றும் மற்றும் லேகியங்களையும் கொடுத்து அதன் செயல் விளக்கங்களையும் எடுத்து கூறினார்கள்.தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்து உள்ளது.சிகிச்சையில் 70 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமான்யன்மே 29, 2020 - 09:21:17 PM | Posted IP 162.1*****

19 பேரை கலக்டரும் 23 பேரை உறைவிட மருத்துவரும் வழி அனுப்பும் புரோட்டாகால் மெய் சிலிர்க்க வைக்கிறது

சாமான்யன்மே 29, 2020 - 09:18:47 PM | Posted IP 162.1*****

19 பேரை கலக்டர் அனுப்புவார்.23 பேரை உறைவிட மருத்துவர் அனுப்புவார். நல்ல கொரோனா அரசியல் விளையாட்டப்பா?!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory