» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இறந்த மூதாட்டியை தொல்லியல் பரம்பில் புதைக்க முயற்சி : ஆதிச்சநல்லூரில் பரபரப்பு

வெள்ளி 29, மே 2020 6:41:28 PM (IST)


இறந்த மூதாட்டியை ஆதிச்சநல்லூர் தொல்லியல் பரம்பில் புதைக்க முயன்ற பொதுமக்களால்பரப ரப்பு ஏற்பட்டது.

உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிச்சநல்லூரில் கடந்த 25ம் தேதி அகழாய்வு பணியானது துவங்கியது. இதற்கிடையில் 114 ஏக்கரிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் இந்த இடத்துக்குள்  சிறு குழியை தோண்ட கூட அனுமதிக்காமல் தடை விதித்து இருந்தனர்.  இதற்கிடையில்  கால்வாய் பஞ்சாயத்தினை சேர்ந்த வீரளபேரியை சேர்ந்தவர் பாப்பாத்தி(98). இவர் வயது முதிர்வால் இறந்தார். வீரளபேரியை சேர்ந்தவர்களை அடக்கம் செய்யும் பரம்பு பகுதியினை தற்போது மத்திய தொல்லியல் துறையினர் வேலியிட்டு அடைத்துவிட்டனர். ஆனாலும் வீரளபேரியை சேர்ந்த மக்கள் தாங்கள் எப்போது அடக்கம் செய்யும் இடத்தில்  பாப்பாத்தியை அடக்கம் செய்ய  குழி தோண்டினர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் மத்திய தொல்லியல் துறையினர் செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.  சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் சங்கரநாராயணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் இருதயமேரி, கால்வாய் கிராம நிர்வாகஅதிகாரி தேன்மொழி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ் குமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன்,செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி  உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பாப்பாத்தியம்மாள் மகன்கள் கோபால், நயினார், பேரன் வழக்கறிஞர் ஜெகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக கருங்குளம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்  சீனி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில்   வீரளபேரி இடுகாட்டுக்கு வேறு இடம் ஓதுக்கப்பட்டு, அந்த இடத்தில்  பாப்பாத்தியை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory