» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொந்த ஊர் திரும்பமுடியாததால் சட்டீஷ்கர் வாலிபர் தற்கொலை

புதன் 27, மே 2020 11:21:18 AM (IST)

நாரைக்கிணறு அருகே சொந்த ஊருக்கு திரும்ப முடியாததால் விரக்தியில் சட்டீஷ்கர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகேயுள்ள கொத்தாலி கிராமத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நாகர் மகன் சித்தன்தாஸ் (18), என்பவர் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள உள்ள சோலார் பவர் பிளாண்டில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 2 மாத காலமாக பணிகள் நடைபெறாததால் வருமானமின்றி தவித்துள்ளார். 

மேலும், அவரால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாரைக்கிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஞானராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Anbu Communications



Black Forest Cakes





Thoothukudi Business Directory