» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தை குத்தகை எடுத்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு : முதியவர் கைது

புதன் 27, மே 2020 11:07:57 AM (IST)

சாத்தான்குளம் அருகே தோட்டத்தை குத்தகை எடுத்த விவசாயியை  அரிவாளால் வெட்டியதாக   முதியவரை  போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(51). இவரது சகோதரர் கெங்கை (35). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருடைய தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில்  நேற்று ஜோதியின் தோட்டத்தில் ஏற்கனவே வேலைபார்த்து வந்த நடராஜன்(70) என்பவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இருவரையும் விவசாயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தாதாம். 

இதில் ராமகிருஷ்ணனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சகோதரர் கெங்கை அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.  இதுகுறித்து புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Black Forest Cakes



Anbu Communications




Thoothukudi Business Directory