» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளத் தொடர்பு விவகாரம்: மண்வெட்டியால் தாக்கி வாலிபரை கொல்ல முயன்றவர் கைது!

புதன் 27, மே 2020 10:42:03 AM (IST)

திருச்செந்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை மண்வெட்டியால் தாக்கி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் முத்துகுமார் (39). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை அந்த பெண்ணின் மகன் ரமேஷ் (24) என்பவருக்கு தெரியவரவே அவர் முத்துக்குமரை கண்டித்துள்ளார். ஆனாலும் முத்துக்குமார் தனது பழக்கத்தை கைவிடவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது நண்பர் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த ஜான் மகேஷ் (30) என்பவருடன் சேர்ந்து முத்துக்குமாருக்கு மதுவாங்கி கொடுத்து, குடிக்க வைத்துள்ளனர். பின்னர், அவர் போதையில் இருந்தபோது மண்வெட்டியால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்தகாயம் அடைந்த முத்துகுமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் கொலைமுயற்சி வழக்குபதிந்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜான் மகேஷை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory