» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோமானேரி கிராமத்தில் குடிமராமத்து பணிகள்: எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதன் 27, மே 2020 10:26:44 AM (IST)சாத்தான்குளம் பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் குளங்களை மராமத்து பணியை எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் ஒன்றியத்தில் கோமானேரி ஊராட்சிக்குள்பட்ட கோமானேரி குளம் சீரமைக்க ரூ.60லட்சமும், நெடுங்குளம் ஊராட்சியில் நெடுங்குளம் சீரமைக்க ரூ.38லட்சமும், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட புளியங்குளம் சீரமைக்க 60 லட்சமும், பணி திட்ட படி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்குளங்களின் மராமத்து பணி தொடக்க பூமி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு மராமத்து பணியை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் குளத்தில் மடையை இடித்து கட்டுதல், மறுகால் பராமரிப்பு செய்தல், புதிய ஷட்டர் அமைத்தல், குளக்கரைகளை பலபடுத்துதல், தண்ணீர் வரத்து கால்வாயை தூர்வாறுதல், தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளதாக சண்முகநாதன் எம்.எல்.ஏ தெரிவித்தார். 

இதில் சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி, துணைத்தலைவர் அப்பாதுரை, நெடுங்குளம் ஊராட்சித் தலைவர் சகாய எல்பின், குடிமராமத்து பணி குழு தலைவர் கந்தன், செயலர் மரியதாஸ், பொருளாளர் மகாராஜசுவாமி, பொது பணி துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகாமி, கந்தவள்ளி குமார், ஒன்றிய அதிமுக செயலர் அச்சம்பாடு சௌந்திரபாண்டி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய அதிமுக செயலர் ராஜ்நாராயணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ப்ரெனிலாகார்மல் போனிபாஸ், கோமானேரி ஊராட்சித் தலைவர் கழுங்கடி முத்து, துணைத் தலைவர் ஐகோர்ட்துரை, புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory