» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் 2 பேர் கைது: நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

புதன் 27, மே 2020 8:27:30 AM (IST)

சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ டிரைவரான இவர் பெட்டிக்கடையும் நடத்தி வந்தார். மேலும் ஸ்ரீவெங்கடேசபுரம் பஞ்சாயத்து 6-வது வார்டு உறுப்பினராகவும் இருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி இரவு தெற்கு பேய்குளம் மெயின் பஜாரில் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே 10 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் போலீசார், செங்குளத்தை சேர்ந்த லிங்கம் (41) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் பேய்குளத்தை சேர்ந்த பழனி (53) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதுதவிர மேலபனைக்குளத்தை சேர்ந்த ராஜமிக்கேல் (32), கீழபனைக்குளத்தை சேர்ந்த செந்தில் ஜோசப் (29), மீரான்குளத்தை சேர்ந்த பண்டாரராஜ் (25) ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசு முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory