» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர் பரபரப்பு வீடியோ வெளியீடு

சனி 23, மே 2020 7:34:40 PM (IST)

தூத்துக்குடியில் கரோனா வார்டில் உள்ளவர் தனக்கு கரோனா இருப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர். ஆனால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி இன்னாசியார்புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பங்குதந்தை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கரோனா வார்டில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,நான் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறேன்.நான் இங்கு வர காரணம் கால் முட்டு பகுதியில் வலி இருந்தது. அதற்காக தனியார் மருத்துவமனை சென்ற போது கரோனா பரிசோதனை செய்து வருமாறு அவர்கள் கூறியதால் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தேன். இங்கு பரிசோதனை செய்தனர். எனக்கு காய்ச்சல், சளி என எதுவுமே இல்லை. ஆனால் கரோனா சோதனை செய்தால் தான் மூட்டு பிரச்சனைக்கு சிகிச்சை செய்வோம் என கூறியதால் வந்தேன்.

எனக்கு கரோனா இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான அறிகுறிகளான  காய்ச்சல், சளி, மூச்சு பிரச்சனை என எதுவுமே இல்லை. வழக்கம் போல் எனது வேலைகளே செய்கிறேன். வரிசையில் சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை .இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல் முறையாக கரோனா வார்டில் இருந்து ஒருவர் பேசி வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications




Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory