» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள்

சனி 23, மே 2020 7:04:57 PM (IST)


தூத்துக்குடி மாவட்டம் செமப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 4 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற  நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் செமப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிவாரண உதவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை கனகா ஆறுமுககனி வழங்கினார். இந்நிகழ்ச்சியில்     செமப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி முனியசாமி ,கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குருச்சந்திர வடிவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory