» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நுண்ணீர்ப் பாசனத் திட்டதிற்கு ரூ.30 கோடி மானியம் ஒதுக்கீடு : ஆட்சியர் தகவல்

சனி 23, மே 2020 5:02:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.30 கோடி மானியத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21 ஆம் நிதியாண்டில் 4,315 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நீராதாரம், மழைப் பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இருக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு தெளிப்பு நீர்ப்பாசன கருவிகள் வழங்கப்படவுள்ளன.

சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 0.40 ஹெக்;டேர் முதல் அதிக பட்சமாக 2 ஹெக்டேர் வரை ஒரு விவசாயி இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனத் கருவிகள் வழங்கப்படவுள்ளன.மேலும், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளின் ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் துணை நீர் மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பாசனம் செய்ய ஏதுவாக டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார்கள், இணைப்புக் குழாய்கள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எனவே, நுண்ணீர்ப் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்புத் திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம்.இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் இதற்காக வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகிலிருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். இத்திட்டத்தின் மூலம் காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயனடையலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory