» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு காவலர்களின் வாரிசுகள் நிவாரண உதவிகள் வழங்கல்

சனி 23, மே 2020 1:19:11 PM (IST)



தூத்துக்குடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு காவலர்களின் வாரிசுகள் நிவாரண உதவிகள் வழங்கினர்.

முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது மாநகர ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளின் புதல்வர்கள் ஒன்று சேர்ந்து காவலர்களிடம் பணம் வசூல் செய்து தினமும் 500 பேருக்கு உணவு சமைத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரானா இல்லாத மற்ற நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு பார்சலில் 35 நாட்கள் உணவு கொடுத்தனர் இதில் ஒரு சில காவல் உயர் அதிகாரிகள் 5000 ரூபாய் வரை கொடுத்து உதவினர். அவர்கள் கொடுத்ததில் மீதி உள்ள பணத்தில் மளிகை பொருட்கள் வாங்கி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு காவலர்களின் புதல்வர்கள் காலை 11 மணிக்கு மாநகர ஆயுதப் படைபிள்ளையார் கோயில் முன்பு ஆயுதப் படை உதவி ஆணையாளர் முத்தரசு தலைமையில் வழங்கினர்.

மேலும் காவலர்களின் புதல்வர்கள் சார்பாக ரூபாய் 25000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஆயுதப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், கோயில் அர்ச்சகர், முடி திருத்தும் பணியாளர்களுக்கு மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, மாவட்ட ஆயுதப்படை உதவி கண்காணிப்பாளர் சிசில், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ்வரி ஆகியோர் வழங்கினர், இதில்  உதவி ஆய்வாளர்கள் கண்ணதாசன், பூமி பாலன், காவலர்கள் குமார், சிவகுமார், மற்றும் காவலர்களின் புதல்வர்கள் மூர்த்தி, பீபி , முத்துராஜ், மகாராஜன், பிரபு தங்கதுரை, ரமேஷ், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை நீதித்துறை ராஜா, லெட்சுமணன், வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications



Thoothukudi Business Directory