» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை : கீதாஜீவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

சனி 23, மே 2020 12:46:05 PM (IST)

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் காலதாமதமின்றி நிவாரண தொகை வழங்கிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தொழிலாள தோழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாய் இரு தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால் இதுநாள் வரை தொழிலாளர் நலவாரியத் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுமையாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் பதிவு செய்திருந்த போதும் சில ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வங்கி கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தினசரி நூறு பேர் நூற்றைம்பது பேர் என்ற அளவிலேயே பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகினறனர்.

அதே போல தொழிலாளர் நலவாரியத்தில் மார்ச் - 2020 வரை புதிப்பித்தவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்படும் என்று சொல்வதாக தெரிகிறது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகினறனர். இந்த நிபந்தனையையும் தளர்த்தி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கிட ஏற்பாடு செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் உடனடியாக பணம் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory