» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சத்தீஷ்கரில் இருந்து பைக்கில் வந்த நபருக்கு கரோனா பரிசோதனை!!

சனி 23, மே 2020 8:11:17 AM (IST)

சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து கோவில்பட்டிக்கு மோட்டார் பைக்கில் வந்த வாலிபர் கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வானரமுட்டி நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (39). கூலி தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர், அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, மோட்டார் பைக்கில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். பெருமாள்சாமி நேற்று கோவில்பட்டிக்கு வந்ததும், அவரை சுகாதார துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கரோனா பரிசோதனை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory