» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்: கனிமொழி எம்.பி ட்வீட்

வெள்ளி 22, மே 2020 4:01:41 PM (IST)

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி எம்.பியான கனிமொழி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுயொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.

கலவரத்தைக் கட்டுப்படுத்த எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்” என தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து

உண்மமே 23, 2020 - 09:35:18 AM | Posted IP 162.1*****

தீம்காவினர் பின்னாடி போனால் நரகம் தான், போராட்டத்திற்கு கல் எரிந்து, மக்களை மாட்டிவிடுவார்கள், கொல்லப்பட்டவர் எல்லாம் அப்பாவி மக்கள்தான் ...

RV hariமே 22, 2020 - 05:42:37 PM | Posted IP 162.1*****

இந்த அறிக்கையால் யாருக்கும் பயன் இல்லை. அன்று திமுக என்ன செய்தது?

M.sundaramமே 22, 2020 - 05:27:21 PM | Posted IP 108.1*****

Such statement doesn't not serve any purpose.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory