» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆறு மாசடைந்தது குறித்து விசாரணை : எம்பவர் அமைப்பு கோரிக்கை

வெள்ளி 22, மே 2020 12:50:44 PM (IST)வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் நிறம் மாறியது குறித்தும், சாக்கடை கலப்பதால் ஏற்படும் மாசு குறித்தும் நேரில் ஆய்வு செய்து தகுந்த தீர்ப்பு வழங்க வேண்டும் என எம்பவர் அமைப்பு சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி எம்பவர் அமைப்பு சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஜெயச்சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் கடந்த சில தினங்களாக தண்ணீர் கலங்கலாக செல்கிறது. மேலும் திடீரென தண்ணீர் நிறம் மாறியதால் பொதுமக்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த தாமிரபரணி ஆற்றிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று அதன் மூலம்  விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் இது பூர்த்தி செய்து வருகிறது. உள்ளாட்சிகளின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் உள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தாமிரபரணி ஆற்றில் மஞ்சள் நிறத்தில் மாசுபட்ட தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் இத்தண்ணீரை குடிநீராக பயன்படுத்த மிகவும் அச்சமடைந்துள்ளனர்.ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு, நேரில் ஆய்வு செய்து தகுந்த தீர்ப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மமே 23, 2020 - 09:41:03 AM | Posted IP 108.1*****

பிரிட்டிஷ் காரர் இன்னும் இருந்திருந்தால் ஆறுகள், நீர்நிலைகள் இன்னும் சுத்தமாக இருந்திருக்கும். திராவிட அரசியலால் நாடு சாக்கடை ஆகி விடுகிறது ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory