» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரஜினி மக்கள்மன்றம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்

வியாழன் 21, மே 2020 8:24:16 PM (IST)


தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் செல்வசக்தி மெடிக்கல் டிரஸ்ட் சார்பில் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரூ. 2 லட்சம் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஏழை எளியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் செல்வசக்தி மெடிக்கல் டிரஸ்ட் சார்பில் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரூ. 2 லட்சம் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திடலில் வைத்து வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட தொழில் நுட்ப அணி செயலாளர் விஜய் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர்  சுவாமிநாதன், நகர இளைஞரணி செயலாளர் ஜெயபால், சிவசூரியன் , செந்தில் ஆகியோர் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக சமூகநலத்துறை தாசில்தார் பயாஸ் முன்னிலையில், அவருடைய அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கப்பட்டது. திடல் முழுவதையும் சுத்தம் செய்து இரண்டு தடவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் ரஜினிகாந்த் படம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சக்திமுருகன், வர்த்தக அணி நிர்வாகிகள் அசோக், அந்தோணி சேவியர், ராஜன், முருகன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மேகலா பழனிமுருகன், தெற்கு மண்டல துணை செயலாளர் லட்சுமணன், தெற்கு மண்டல தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஹெர்பர்ட், வடக்கு மண்டல துணை செயலாளர் ஏகாம்பரம், கிழக்கு மண்டல துணை செயலாளர் அசோக், தெற்கு மண்டல மகளிரணி இணை செயலாளர் கஸ்தூரி,  வட்ட செயலாளர்கள் ரொனால்டு, பில்லா மணி, செந்தில், அன்புதுரை உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

karnarajமே 21, 2020 - 09:37:40 PM | Posted IP 108.1*****

GOOD JOB. CONGRATS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory