» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 135 ஆக அதிகரிப்பு : அருட்தந்தையர்கள் தனிமைப்படுத்தல்

வியாழன் 21, மே 2020 7:32:26 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் 70 வயது கத்தோலிக்க பாதிரியாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் இறந்துள்ளனர். 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 104பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அருட்தந்தையர்கள் தனிமைப்படுத்தல்!

தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள ஓய்வு பெற்ற கத்தோலிக்க அருட்தந்தையர்களுக்கான இல்லத்தில் தங்கியுள்ள 70 வயது அருட்தந்தை ஒருவருக்கு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இல்லத்தில் தங்கியிருந்த 14 ஓய்வு பெற்ற அருட்தந்தையர்கள் மற்றும் 3 அருட்சகோதரிகள் அந்த இல்லத்திலேயே தனித்தனி அறைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 

தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என தெரியவில்லை. அவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட், அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும், வெளியூர் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் எங்கெங்கு சென்றார், எப்படி தொற்று ஏற்பட்டது என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

Kalairajanமே 22, 2020 - 07:39:54 PM | Posted IP 173.2*****

சின்ன கடைகளில்தான் தனிமனித இடைவெளி மற்றும் முககவசம் பின்பற்ற படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory