» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் மருத்துவ பரிசோதனை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

சனி 2, மே 2020 3:41:26 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்படுவார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் மேலகரந்தை சோதனைசாவடியில் மேற்கொள்ளபட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  இன்று (02.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் 3731 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 27 நபர்கள் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள். இதில் 25 நபர்கள் ஏற்கனவே நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு நபர் நேற்று பூரணம் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். நமது மாவட்டத்தில் சிகிச்சை பெற்று பூரணம் குணம் அடைந்த 26 நபர்கள் வீடு திரும்பி உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. இதில் செய்துங்கநல்லூர், காயல்பட்டணம், கேம்பலாபாத் ஆகிய 3 பகுதிகள் 01.05.2020 முதல் அப்பகுதியில் உள்ள தடைகளை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் சளி, காய்ச்சல், இரும்மல் உள்ளிட்ட அறிகுறியுடன் நபர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவர்களது மாதிரிகளும் பரிசோதனை செய்து கரோனா தொற்று இருப்பின் அதற்கான சிகிச்சைகள் வழங்கபடுகிறது. வெளி மாநிலம் மற்றம் வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  மேலும் சோதனைசாவடி 24 மணி நேரமும் குழுக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தபட உள்ளது. 

இந்த குழுவில் காவல்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் இடம்பெறுவார்கள். வெளி மாநிலம் மற்றம் வெளி மாவட்டத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைபடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக முன் அனுமதி பெறாமல் வரும் நபர்கள் மற்றும் அழைத்து வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி பாலிடெக்னிக் மற்றும் வ.உ.சி. கல்லூரியில் சுமார் 200 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்த வார்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. 

கிராம பகுதிகளில் முன் அனுமதி பெறாமல் வரும் நபர்களை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை தெரிவிக்கும் வகையில் கிராம அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஊராட்சி தலைவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் இடம்பெறுவார்கள். மேலும் இவர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முககவசங்கள், சுகாதாரம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். ஏற்கனவே அந்தந்த வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் ஊராட்சி தலைவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்த நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு மீண்டும் செல்வதற்கு ஏதுவாக 3 கட்டுபாட்டு அறைகள் மற்றும் வாட்ஸ் அப் எண் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 8700 நபர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதி ஆகியவற்றை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்புவது தொடர்பாக மூத்த இந்திய ஆட்சி பணி உயர் மட்ட அலுவலர் நியமித்து உள்ளார்கள். ஆரவார அயஎயவவயஅ என்ற செயலி மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நியளள நடைமுறைகளை மாற்றப்பட்டுள்ளது. 

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திற்கு செல்ல விரும்பியவர்கள் https://tnepass.tnega.org/#/user/pass எனும் இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நமது மாவட்டத்திற்குள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். நமது மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்வதற்கு இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறைகள் நாளை (03.05.2020) நடைமுறைக்கு வர உள்ளது. வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை 100 சதவிதம் சோதனை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். 

வீட்டில் இருந்து வெளி வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முககவசங்களை அணிந்து வர வேண்டும். நமது மாவட்டத்தில் 5 முக்கியமான சோதனை சாவடிகள் உள்ளது. இந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட உள்ளது. வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு; 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த ஊரடங்கு உத்தவு தொடர்ந்து மே 3 வரை நீடிக்கும். பின்பு முதலமைச்சரின் அறிவிற்பிற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் பாரதியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை ஆட்சியர்  பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் கோவில்பட்டி அனிதா, பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் கட்டுமானம்) உதவி செயற்பொறியாளர் அருள்நெறிசெல்வன், எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், காவல் ஆய்வாளர் ஞானபிரகாசி, செயல் அலுவலர் கனேசன் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory