» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் - லாரி மோதல்: தபால் நிலைய ஊழியா் உயிரிழப்பு!!

செவ்வாய் 28, ஏப்ரல் 2020 6:31:47 PM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் மோதியதில் தபால் நிலைய ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். 

தூத்துக்குடி சாமுவேல் புரத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் ஐயப்பன் (52). குளத்தூர் ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் ஏட்டையா மகன் முனிசாமி (32) இவர்கள் இருவரும் எப்போதும் வென்றான் தபால் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். இன்று மாலை 5.30 மணிக்கு வேலை முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். முனியசாமி மோட்டார் சைக்கிள் ஓட்டினார். ஐயப்பன் பின்னால் அமர்ந்திருந்தார். 

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது  இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டடனர். அப்போது ஐயப்பன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த முனியசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் முத்துராஜ் (35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory