» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாக்டர்களை கையெடுத்து கும்பிடுங்க : போலீசாருக்கு டி.எஸ்.பி அறிவுரை

திங்கள் 27, ஏப்ரல் 2020 10:27:21 AM (IST)

தூத்துக்குடியில் அத்தியாவசிய பணிக்கு செல்வோரை காக்க வைக்க கூடாது என்றும் அடையாள அட்டையை காண்பித்த உடன் அவர்களை அனுப்பி விட வேண்டுமென டவுன் டிஎஸ்பி பிரகாஷ் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக தற்போது இந்தியா முழுவதும் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் தூத்துக்குடியிலும் முக்கிய சாலைகளில் பேரிகார்டு வைத்து போலீசார் அடைத்துள்ளனர். தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது வழக்கு பதியப் படுகிறது. ஆனால்  அத்தியாவசிய பணிக்கு செல்லும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் சாலைகளில் செல்லும்போது சாதாரண உடைகளில் தான் செல்வார்கள். மருத்துவமனை சென்றவுடன் தங்கள் சீருடைகளை அணிந்து கொள்வர். அவர்கள் வேலைக்கு செல்லும் போதும் வரும் போதும் சோதனையிடும் போலீசார் , அத்தியாவசிய பணிக்கு செல்வோர் தங்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகும் ஏன் சீருடை அணியவில்லை என கேட்பதாக டிஎஸ்பி பிரகாஷ்க்கு புகார்கள் சென்றது.

இதுகுறித்து உடனே டிஎஸ்பி., நடவடிக்கை எடுத்துள்ளார், அவர் போலீசாருக்கு அறிவித்துள்ளதாவது, அத்தியாவசிய பணிகளான மருத்துவர்கள், நர்ஸ்கள், ஊடகத்துறையினர், மின்வாரிய பணியாளர்கள், சுகாதாரதுறையினர், தூய்மைபணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்தால் அவர்களை உடனே அனுப்பி வைத்துவிட வேண்டும். அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்கக் கூடாது. முடிந்தால் அவர்கள் செய்யும் சேவைகளுக்காக அவர்களுக்கு மரியாதை செலுத்தி கையெடுத்து கும்பிட்டு அனுப்பவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவல்துறைக்கு உதவியாக உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், தன்னார்வலர்கள் ஊர்க்காவல் படையினர் ஆகியோர்தான் அத்தியாவசிய பணிகளை செல்வோரிடம் கெடுபிடிகள் செய்வதாக கூறப்படுகிறது. அவர்களை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory