» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மேலும் 3பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சனி 25, ஏப்ரல் 2020 11:01:54 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட 3 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயினால் 27 நபர்கள் பாதிக்கப்பட்டு அதில் 22 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 5 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 17 நபர்களும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 நபர்களும் குணம் அடைந்து ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து போல்டன் புரத்தை சேர்ந்த 2 நபர்களும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து அய்யனாரூத்து பகுதியை சேர்ந்த ஒரு நபரும் இன்று (25.04.2020) வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குணமடைந்தவர்களை  மருத்துவமனை முதல்வர்  திருவாசகமணி மற்றும் மருத்துவர்கள், பழங்கள் வழங்கி வாழ்த்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபோல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குணம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனை முதல்வர்  ரவிசந்திரன் பழங்கள் வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என இன்னும் 4 நபர்கள் மட்டும் கொரேனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மக்கள் கருத்து

SivaranjaniApr 27, 2020 - 12:03:23 PM | Posted IP 162.1*****

Update daily status of corona virus in Thoothukudi district like Active cases ,Discharged.

கர்ணராஜ்Apr 25, 2020 - 04:43:20 PM | Posted IP 108.1*****

போல்டன்புரம் & ராமசாமிபுரம் இப்போ காரோண free ஏரியா ஆகி விட்டது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory