» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அத்தியாவசிய பணிக்கு செல்வோரிடம் போலீசார் கெடுபிடி : வேலைக்கு செல்வோர் விரக்தி

சனி 18, ஏப்ரல் 2020 10:59:15 AM (IST)

தூத்துக்குடியில் அத்தியாவசிய பணிக்கு செல்வோரிடம் போலீசார் கெடுபிடி செய்வதாக அந்த பணிகளுக்கு செல்வோர் குற்றம் சாட்டினர். இதனால் பணிகளுக்கு செல்வோர் விரக்தி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதனால் தூத்துக்குடியிலும் அனைத்து பிரதான சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் ஒரு மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசியப் பணிகளான மின்சாரம், மருத்துவமனைக்கு செல்லும் டாக்டர்கள், நர்ஸ்கள் மேலும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

அப்போது சாலையில் சோதனை செய்யும் போலீசாரிடம் தங்களது அடையாள அட்டைகளை அவர்கள் காண்பித்த பிறகும் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளை போலீசார் எழுப்புவதாக அத்தியாவசிய பணிக்கு செல்வோர் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே கடுமையான பணிச்சுமை, கொரோனா அச்சம் ஆகியவற்றை தாங்கி கொண்டு பணி செய்து வரும் நிலையில் போலீசாரின் இதுபோன்ற கேள்விகள் தங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக தெரிவித்த அவர்கள் போலீசாரை விடவும் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஊர்காவல்படை, முன்னாள் ராணுவ வீரர்கள், பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர்  அதிக கெடிபிடிகள்  செய்வதாக கூறினார்கள்.  இதனால் பணியிலிருந்து விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலேயே இருந்து விடலாமா என யோசிப்பதாக கூறினர். அடையாள அட்டை காண்பித்த உடன் தங்களை செல்ல அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, ஊரடங்கு தொடங்கிய பொழுது காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொதுமக்களை சாலையில் செல்ல அனுமதித்தோம். சில இடங்களில் மட்டும் சாலைகளை அடைத்து வைத்திருந்தோம். நாட்கள் செல்லச்செல்ல காலையிலும் பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்துமாறு எங்கள் உயரதிகாரிகள் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அவர்கள் கூறுவதை தான் நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு தினசரி உயரதிகாரிகள் ஒவ்வொரு உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். ஆனால் இது தெரியாமல் பொதுமக்கள் எங்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர் என தெரிவித்தார் .


மக்கள் கருத்து

தங்க பிரின்ஸ்Apr 25, 2020 - 09:52:54 PM | Posted IP 108.1*****

விவசாயிகளை விரட்டும் அவலம். தூத்துக்குடி சுற்று வட்டார விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மாவட்டத்தில் கொண்டு சேர்க்க காவல் துறையினர் தடை செய்கின்றனர். அவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபடுகிறது. மேலும் அவர்களுடைய விளைபொருட்களை பறிமுதல் செய்யும் அவலம். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இனியாவது விவசாயிகள் பாதுகாக்க படுவார்களா? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory