» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனைத்து சாலையையும் அடைத்தால் எப்படி செல்வது ? அத்தியாவசியபணிக்கு செல்வோர் கேள்வி

வியாழன் 16, ஏப்ரல் 2020 1:28:40 PM (IST)


தூத்துக்குடியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, அனைத்து பிரதான சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடும் சிரமத்தில் உள்ளனர். இவ்வாறு அனைத்து சாலைகளையும் அடைத்தால் எவ்வாறு செல்வது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.  மேலும், தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் அதனை இணைக்கும் தெருக்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. டபிள்யூஜிசி ரோடு, விஇ ரோடு, தாமோதரன் நகர், சண்முகபுரம், பிரையன்ட் நகர் 1 முதல் 12 வரையிலான தெருக்கள், சிதம்பர நகர் 1 முதல் 10 வரையிலான தெருக்கள், அண்ணாநகர், டூவிபுரம், மட்டகடை, ஆகிய பகுதிகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலில் தூத்துக்குடி சிகப்பு மண்டலமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தாெற்றால் 26 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் போல்டன்புரம் பகுதியில் பத்திற்கும் அதிகமானாோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், ஊடகத்துறை, வங்கிகள், காப்பீடு துறையில் பணிபுரிவாேர், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் தூத்துக்குடியில் பெண்கள் பள்ளி அருகே உள்ள சாலை முழுமையாக அடைக்கப்பட்டது தெரியாமல் அவ்வழியே வந்த நர்ஸ் ஒருவர் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டு பின்னர் திரும்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவோரின் நலன் கருதி பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்ட இடங்களில் காவலர் ஒருவரை பணியில் இருக்க செய்து அவ்வழியே வருவோரை விசாரித்து அதன் பின்னர் அவர்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட எஸ்பி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

suthaApr 16, 2020 - 04:21:54 PM | Posted IP 162.1*****

அண்ணாநகர் டூவிபுரம் அடைக்கவில்லை மடயர்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory