» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்தனர் : வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

புதன் 15, ஏப்ரல் 2020 5:47:19 PM (IST)


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நலமுடன் வீடு திரும்பினர்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்து கடந்த 30 ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர்  பாசில் மற்றும் ஷேக் முகமது ஆகியோர் இன்று சிகிச்சை முடிந்து தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் இவர்களை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தார் இவர்கள் தங்களது வீடுகளில் இன்னும் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேர் கொரானா பாதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். ஐந்து பேர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேரில் 2 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் மீதி 18 பேர் மட்டும் தற்போது கொரானா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றர். கொரானா பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  போல்டன்புரத்தில்  நாளைமுதல் நடமாடும் பணம் எடுக்கும் இயந்திரம் ஏடிஎம் செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

JvmoorthyApr 15, 2020 - 08:19:17 PM | Posted IP 173.2*****

நடமாடும் ATM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory