» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 149 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வெளியே வர வேண்டாம் என அனைத்து இடங்களிலும் காவல் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறி வெளியே வருவோரை போலீசார் ஆங்காங்கே எச்சரித்து அனுப்பினா்.

இருப்பினும், மக்கள் நடமாட்டம் குறையாததால் மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனா். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் தடையுத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக மாவட்டம் முழுவதும்  126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  149 போ் கைது செய்யப்பட்டனா். 97 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory