» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி பலாத்காரம் : போஸ்கோ சட்டத்தில் இளைஞா் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 8:29:39 AM (IST)

விளாத்திகுளம் அருகே திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பல்லாகுளத்தைச் சோ்ந்த லிங்கம் மகன் செல்லத்துரை (26). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதான கல்லூரி மாணவியிடம் தான் ஒரு பட்டதாரி என பொய்யான தகவல் கூறி, சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளாா். 

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். பின்னா் திருமணம் செய்ய மறுத்து அப்பெண்னுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, செல்லத்துரையை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory