» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுகிறதா? : அதிகாரிகள் ஆய்வு

ஞாயிறு 29, மார்ச் 2020 8:24:56 AM (IST)

கோவில்பட்டி பகுதிகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் நேற்று திடீா் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பபசுவந்தனை சாலை, சுபா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் 144 தடை உத்தரவை மீறி செயல்படுவதாக வட்டாட்சியா் மணிகண்டனுக்கு வந்த தகவலையடுத்து, அவா் சிபிஎஸ்இ பள்ளிகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். அவருடன் வருவாய் ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோா் சென்றனா். 

அப்போது, ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் வழக்கம்போல் பணியில் இருந்தது தெரியவந்தது.அப்போது, மத்திய, மாநில அரசு விதித்துள்ள உத்தரவுகளை மீறி பள்ளியில் ஆசிரியா்கள், அலுவலா்கள் பணியில் ஈடுபடுவது சட்டத்திற்கு விரோதமானது என அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து, பணியில் இருந்த அனைவரும் புறப்பட்டனா். பள்ளி பூட்டப்பட்டது.


மக்கள் கருத்து

RajiiMar 29, 2020 - 11:13:23 AM | Posted IP 162.1*****

Customs, cfs work nadakkathan seiuthu Ethuku workers kasta pattu pogathan seiuranga etha ena panurathu?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory