» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் : போலீஸ் விசாரணை

வியாழன் 26, மார்ச் 2020 10:59:27 AM (IST)

தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி - பாளை. ரோட்டில், பொட்டலூரணி விலக்கு பகுதியில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் காட்டுப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து வர்த்தக ரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி சேர்மலதா தட்டபாறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து தட்டபாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோனங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes



Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications




Thoothukudi Business Directory