» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அண்ணாநகர் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க், சோப் : அதிமுக நிர்வாகி வழங்கினார்

வியாழன் 26, மார்ச் 2020 10:52:29 AM (IST)பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ஆகியவற்றை ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி வீட்டினுள் வசிக்கும் மக்களுக்கு கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள குடும்பத்திற்கு 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலையில்லா சோப், டெட்டால் சனிடேஷர், 10ஆயிரம் நபருக்கு விலையில்லா ஃபேஸ் மாஸ்க், போன்றவை அண்ணா நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் வீடு, வீடாக சென்று முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவருமான பி.ஏ.ஆறுமுக நயினார்  தலைமையில் வழங்கப்பட்டது. 

அப்போது அவருடன்   தலைமைக் கழகப் பேச்சாளர் எஸ்டி.கருணாநிதி, வட்டக் கழக பிரதிநிதி வீரக்கோன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனபட்டு, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் சகாயராஜா உடன்இருந்தனர்.  இதனைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் எங்களுக்கு வீடு தேடி வந்து எங்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களான பேஸ் மாஸ்க், சானிட்டரி ஹேண்ட் வாஷ், டெட்டால் போன்றவைகளை தனது சொந்த செலவில் வழங்கிய முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் மற்றும் இதற்கு ஆணையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory