» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு

வியாழன் 26, மார்ச் 2020 9:01:36 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா எதிரொலியாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிப்படி கோயிலில் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 25) முதல் 21 நாள்கள் ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் முகக் கவசம் அணிந்தவாறு கோயிலில் பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் தனியாா் பாதுகாவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory