» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலால் பரபரப்பு

புதன் 25, மார்ச் 2020 8:27:03 AM (IST)

சீனாவிலிருந்து  வந்த சரக்கு கப்பலால் தூத்துக்குடி வஉசி துறைமுக ஊழியா்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் துறைமுகங்களுக்கு கப்பல் வருவது தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள ஷிவான் துறைமுகத்திலிருந்து கடந்த 6ஆம் தேதி புறப்பட்ட வான் ஹய் 508 என்ற சரக்குக் கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள 8ஆவது சரக்குத் தளத்துக்கு நேற்று அதிகாலை வந்தடைந்தது. இதனால், துறைமுக ஊழியா்களிடையே பரபரப்பு நிலவியது.

இந்த விவகாரம் குறித்து ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே 14 நாள்கள் நிறுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினரால் கப்பலில் உள்ளோா் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கப்பலிலிருந்த மாலுமிகள், ஊழியா்கள் யாரும் துறைமுகத்தில் இறங்க அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து

ஒருவன்Mar 25, 2020 - 10:58:50 AM | Posted IP 108.1*****

சீனாவில் கொரோனா வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது, 2 மாதத்தில் சீனா கப்பல்கள் வந்தததும் எந்தெந்த ஷிப்பிங் கம்பெனிகள் சென்று வருகிறது கணக்கெடுத்து பாருங்கள், எந்த ஊழியர்கள் சீனா கப்பல்களை சென்று வருகிறார்களா ? அந்தந்த கம்பெனி ஊழியர்களையும் சோதனை பண்ணுங்கள், இவ்வளவு நாள் தெரியாமல் உள்ளது ... அரசு இப்போதே தான் 10 நாட்கள் முன்னாடி தடுத்து வருகிறது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory