» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூடல் : ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 23, மார்ச் 2020 3:53:34 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31.03.2020 அன்று வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31.03.2020 அன்று வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் வரும் 31.03.2020 வரை தங்களுக்கு தேவையான ஆன்லைன் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க, ஏற்கனவே தமிழக அரசினால் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்ற விபரம் பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory