» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

புதன் 26, பிப்ரவரி 2020 7:43:39 PM (IST)

தூத்துக்குடி அருகே சக்கம்மாள்புரத்தில் தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் அருகே சக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் மாதேஷ் (9), மாரிஷ் (7). இந்நிலையில் சக்கம்மாள்புரத்தில் நடைபெறும் திருமணத்திற்காக பிரபாகரன் தனது  2 மகன்களுடன் சக்கம்மாள்புரத்திற்கு வந்துள்ளார். இன்று மாலை சிறுவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றதாக தெரிகிறது. 

அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த சிறுவர்கள் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes



Anbu Communications



Thoothukudi Business Directory