» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் : கனிமொழி எம்.பி. பேட்டி

புதன் 26, பிப்ரவரி 2020 6:53:58 PM (IST)ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என பேய்குளத்தில் கனிமொழி எம்.பி. பேட்டியின் போது கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிர்வாதபுரம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச மருத்துவமுகாமை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று. தமிழ் நாகரீகத்தை பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகள், ஆதிச்சநல்லூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தற்போது வரை தரப்படவில்லை. 

அதுமட்டுமல்லாமல் இங்கு நடந்த அகழ்வாய்வின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் பல முறை கோரிக்கை வைத்தும் கூட சென்ற டிசம்பர் மாதம் அறிக்கை வெளியிடப்பட்டும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அதன் அறிக்கையை  வெளியிடப்படவில்லை. 

எனவே ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாய்வின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். மேலும் மத்திய அரசு ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு பணிகள் துவங்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் அதற்கான எந்தவிதப்பணிகளும் தற்போது வரை துவங்கவில்லை.  எனவே உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கூறினார். அப்போது அவருடன்  திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதா கிருஷ்ணன் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory