» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா சாரண இயக்கத்தினருக்கு கோல்டன் ஆரோ விருது

புதன் 26, பிப்ரவரி 2020 4:20:11 PM (IST)தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள குருளையர், நீலப்பறவையினர்களுக்கு  தேசிய கோல்டன் ஆரோ விருது வழங்கப்பட்டது.

ஹரியானாவில் உள்ள காத்பூரியில் நடைபெற்ற உலக சிந்தனைநாள் பேரணியில் 19 மாநிலங்களிலிருந்து 357 குருளையர்கள், நீலப்பறவையினர்கள் தேசிய விருதான கோல்டன் ஆரோ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் WAGGGS CEO சாரா நான்கொலஸ், சாரண, சாரணிய இயக்கத்தின் தேசியத்தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் னுச.அனில் குமார் ஜெயின், தேசிய முதன்மை ஆணையர் கன்டேல்வால் ஆகியோர் குருளையர், நீலப்பறவையினருக்கான விருதினை வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாவட்ட சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்டார் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர். 

Model Making, Greetings ஆகிய போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வெற்றி பெற்றன. அதன்பின் தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட பயிற்சி ஆணையர் மற்றும் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம், சாரணப் பொறுப்பாசிரியர் பிரித்விராஜ் ஆகியோருக்கு BSG Friendship பதக்கத்தினை தேசிய தலைவர் அனில்குமார் ஜெயின் வழங்கி பாராட்டினார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் மாநில அளவில் நடைபெற்ற குருளையர், நீலப்பறவையினருக்கான Greeting, Model Making போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பெற்றது. சென்னையில் நடைபெற்ற சிந்தனைநாள் போட்டியில் மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், தலைவர் மணி, செயலாளர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குருளையர், நீலப்பறவையினர்களுக்கான சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டம் சார்பில் AMK தொடக்கப் பள்ளி, கோல்டன் நர்சரி பள்ளி, ஸ்டார் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து பங்கு பெற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜாண்சன்பால், மாவட்ட ஆணையர் சண்முகம், மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணர்) சரவணன், மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணியர்) ஜெயாசண்முகம, தமிழகப் பொறுப்பாளர் பூர்ண சந்திரன் LT(C) ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களாக விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பொறுப்பாக அழைத்து சென்று வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Thoothukudi Business Directory