» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகுதிச்சான்று புதுப்பிக்கபடாத அரசு பேருந்துகளால் பயணிகள் உயிருக்கு ஆபத்து: முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

புதன் 26, பிப்ரவரி 2020 4:03:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதிச்சான்று புதுப்பிக்கபடாத அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் உயிருக்கு ஆபத்து என முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் உயிருக்கு ஆபத்து மற்றும் நஷ்டஈடு தொகையை பெற முடியாத நிலை எற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் செயலாளர் பிஜே பாண்டி, பொருளாளர் முருகன் ஆகியோர் முதலமைச்சரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் த.அ.போ.கழக பேருந்துகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்ப்டுகிறது. ஸ்ரீவைகுண்டம் த.அ.போ.க, கிளையில் இயக்கப்படும் பேருந்து TN21N 1761 தகுதிச்சான்று தேதி கடந்த 4.2.2020ல் முடிவடைந்தும் தொடர்ந்து இயக்கப்படுகிறது. 

தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கு பேருந்தினால் விபத்து ஏற்பட்டால் நஷ்டஈடு தொகை பெற முடியாது, மேலும் பேருந்தால் விபத்து ஏற்பட்டால் அந்த பேருந்தினை காவல்துறை பறிமுதல் செய்யும் நிலை ஏற்படுவதோடு, மக்கள் உயிருக்கும் ஆபத்து நிலையும் உண்டாகும் நிலை உள்ளது. மாவட்டத்தில் அனுமதி பெறாத அரை பாடி வண்டிகள் அனுமதி பெறாமல் இயக்கப்படுகிறது. இந்த வண்டிகளால் விபத்து எற்பட்டால் மக்களுக்கு நஷ்டஈடு தொகை பெற சட்டத்தில் அனுமதி இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாத, தகுதிச்சான்று புதுப்பிக்கபடாத அரசு பேருந்துகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதோடு, அரை பாடி வண்டிகளை தடை செய்யவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory