» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 50 ஏக்கரில் பயோ டைவர்சிட்டி பூங்கா : ஆட்சியர் தகவல்

புதன் 26, பிப்ரவரி 2020 1:35:08 PM (IST)
தூத்துக்குடியில் பயோ டைவர்சிட்டி பூங்கா பணிகள் துவங்க உள்ளது என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி இன்று (26 ம் தேதி) நடைபெற்றது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 13 பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார். பேரணியானது சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, பாளையங்கோட்டை ரோடு வழியாக குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று, பாலவிநாயகர் கோவில் வழியாக மீண்டும் பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் காற்று மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வு கொண்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், காற்று மாசுபடுதலினால் ஏற்படும் தீமைகள், நோய்கள் மற்றும் சுற்றுசூழல் கேடுகளைப் பற்றி முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்பபுணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்கள். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:சதமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் பள்ளி கல்வித்துறையும் இணைந்து சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணி மூலம் பொதுமக்களிடையே காற்று, தண்ணீர் மற்றும் ஒளி மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக விழிப்பணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தி மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

மேலும் பள்ளி அளவில் மாணவ, மாணவியர்களிடையே மாசு கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தின் மூலம் சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.1 கோடி மதிப்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மீன் ஆராய்ச்சி கல்லூரி அருகில் 50 ஏக்கர் பரப்பளவில் பயோ டைவர்சிட்டி பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள் முறையாக கடைபிடித்து மாசு இல்லாத மாவட்டமாக மாற்றிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா, தூத்துக்குடி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பென்சர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அருள்சகாயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

selvakumarFeb 27, 2020 - 10:43:11 AM | Posted IP 108.1*****

first yerkanave arivitha thittangalai nadaimuraipaduthunga,olunga ella areakum road podunga aprama poonga kattunga collector sir

TN69GOVTBUSFeb 27, 2020 - 12:47:01 AM | Posted IP 162.1*****

Integrated Bustandah kondu varaeninga. No use for the publics. Up to date what's the plan progress on the bustand

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 149 போ் கைது

ஞாயிறு 29, மார்ச் 2020 12:15:35 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Thoothukudi Business Directory