» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 5 வாலிபர்கள் கைது

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:58:07 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் எஸ்ஐ மகராஜன் ரோந்து பணியில் இருந்த போது கோமஸ்புரம் இசக்கியம்மன் கோவில் அருகே 5 பேர் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்தார்களாம். விசாரணை நடத்தியதில் அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை பார்த்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கீழஅழகாபுரியை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன் (20). பெருமாள் மகன் கர்ணன் (19). சுனாமி காலனியை சேர்ந்த பீர்முகமது (19). ஆரோக்கியபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் சபாபதி (19). டி.சவேரியார்புரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் மாரிச்செல்வம் (19) என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications




Thoothukudi Business Directory