» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாப சாவு; நண்பர் படுகாயம்

ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:08:54 AM (IST)

எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மகன் தினே‌‌ஷ் (24). இவர் ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். சென்னை திரு.வி.க. நகர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் விக்னே‌‌ஷ் (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும், தூத்துக்குடியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றனர். பின்னர் நேற்று மதியம் அவர்கள் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தினே‌‌ஷ் காரை ஓட்டினார். 

எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு அருகில் சென்றபோது,  தூத்துக்குடியில் இருந்து ஆம்பூருக்கு காலணி லோடு ஏற்றுவதற்காக சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த தினே‌‌ஷ், விக்னே‌‌ஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே தினே‌‌ஷ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சுடலைமணியிடம் (26) விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Thoothukudi Business Directory