» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளால் மிரட்டி ஆசிரியைகளிடம் 12 பவுன் நகை பறிப்பு

சனி 9, நவம்பர் 2019 8:22:54 AM (IST)

எட்டயபுரம் அருகே அரிவாளை காட்டி மிரட்டி ஆசிரியைகளிடம் 12 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள எம் கோட்டூர் புரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி ரேணுகா தேவி (51), எட்டயபுரம் மேல ரத வீதியை சேர்ந்தவர் காளியப்பன் மனைவி கற்பகம் (47). இவர்கள் இருவரும் முத்துலாபுரத்தில் உள்ள இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றனர். பள்ளி முடிந்ததும் ஆசிரியை ரேணுகாதேவி, சக ஆசிரியை கற்பகத்தை மொபட்டில் அழைத்துச் சென்று கோட்டூர் விலக்கில் இறக்கிவிட்டு விட்டு செல்வார். கற்பகம் அங்கிருந்து பஸ்சில் எட்டயபுரத்திற்கு செல்வார்.

நேற்று இருவரும் வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் அவர்கள் சென்றனர். எம் கோட்டூர்புரம் விலக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அருகே பின்னால் பைக்கில் டிப்டாப்பாக உடையணிந்து வந்த வாலிபர்கள், மொபெட்டில் வந்த ஆசிரியைகளை வழிமறித்தனர். அப்போது அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே அந்த வாலிபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி இருவரிடமும் 12 பவுன் நகையை பறித்தனர். மேலும், மோதிரம், கம்மல் போன்றவற்றை பறிக்க முயன்ற போது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஓடிவந்துள்ளார். 

இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் காயமடைந்த ஆசிரியைகள் ரேணுகாதேவி எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவ குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து

அருண்Nov 9, 2019 - 01:40:33 PM | Posted IP 108.1*****

அந்த ஏரியாவே திருட்டுக்கு பேர் போனதுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory