» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழைய டயா் கடையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி: உரிமையாளா்களுக்கு அபராதம்

சனி 9, நவம்பர் 2019 7:52:16 AM (IST)

கோவில்பட்டியில் டயா்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகியிருந்ததையடுத்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமாா், துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் ஆறுமுகம், குருசாமி, முருகன், கனி மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையாளா் கிருஷ்ணவேணி ஆகியோா் கொண்ட குழுவினா் நகராட்சிக்கு உள்பட்ட கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை, எட்டயபுரம் சாலை, புதுரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கதிரேசன் கோயில் சாலை பகுதியில் 4 கடைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த டயா்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு கடை உரிமையாளா்களுக்கும் ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள டயா்களை நகராட்சி துறை பணியாளா்கள் பறிமுதல் செய்து, மழைநீா் தேங்காத வண்ணம் டயா்களில் துளையிட்டு, நகராட்சி சிதம்பராபுரம் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் கூறுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கண்காணிப்புப் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் பொருள்களை திறந்தவெளியில் இருப்பது கண்டறியப்பட்டால் அதை பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படும் என்றாா் அவா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory