» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை : பெண் உட்பட 2 பேர் கைது, 2 பேருக்கு வலை

வெள்ளி 8, நவம்பர் 2019 8:23:50 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில்  பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை ஆச்சிமடத்தை சேர்ந்தவர் விக்ரமாதித்திய ராஜபாண்டி (51). கார் புரோக்கர். திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். இவர் மீது  ஏற்கனவே சென்னை, தஞ்சாவூர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளது. இவருக்கும் சங்கரன்கோவில் வன்னிக்கோனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ராவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

சித்ரா விவாகரத்து பெற்றுள்ளார். அவரை விக்ரமாதித்திய ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனது நண்பர்களான அர்ஜுனன் மகன் ராமர், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து குடி வைத்துள்ளார். அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதில் ராமர் கார் ஓட்டுனர் என்பதால் கார் வாங்குவது, விற்பது தொடர்பாக விக்ரமாதித்திய ராஜபாண்டி வீட்டிற்கு வந்து சென்றதில் ராமருக்கும், சித்ராவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். 

இது குறித்து தெரிய வரவே ராஜபாண்டி , சித்ராவை கண்டித்துள்ளார். எனவே ராஜபாண்டியை கொலை செய்ய ராமர் மற்றும் சித்ரா முடிவு செய்து அவருக்கு கடந்த அக்டோபர் 15 ம் தேதி மது வாங்கி கொடுத்துள்ளனர்.அதன் பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை தட்டப்பாறையிலுள்ள ஒரு கிணற்றிலும் போட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்காசியில் நடந்த வாகனசோதனையின் போது போலீசிடம் ராமர் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்துள்ளது. இது குறித்து தென்காசி போலீசார் அளித்த தகவலின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் ராமரை புதியம்புத்தூர் அழைத்து வந்து காெலை செய்து உடலை போட்ட இடத்தை கண்டுபிடித்தனர். தலையை தேடி வருகின்றனர். 

கொலை நடைபெற்று கிட்டத்திட்ட ஒரு மாதம் ஆனதால் ராஜபாண்டி உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த புதியம்புத்தூர் போலீசார் சித்ரா, ராமர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ராஜபாண்டி உடலை காரில் எடுத்து சென்ற கனி, சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory