» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச போட்டியில் பங்குபெற நிதியின்றி தவிப்பு : மாணவனுக்கு உதவ சமூகஆர்வலர்கள் கோரிக்கை

வெள்ளி 8, நவம்பர் 2019 7:36:23 PM (IST)

சாத்தான்குளம் பள்ளி மாணவன் மலேசியாவில் நடைபெற உள்ள  சர்வதேச கராத்தே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றும்  நிதியில்லாமல் தவித்து வருகிறான். அந்த சிறுவனுக்கு நல் உள்ளம்  கொண்டவர்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அரசு உதவ வேண்டும் என மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆரோன் ஜெபஸ். இந்த மாணவன் இந்தியா அளவில் பல்வேறு கராத்தே போட்டியில் பங்குபெற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளான். தற்பொழுது மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இந்த போட்டியானது  நவம்பர்  23ம்தேதி தொடங்கி  24ம் தேதிவரை 2 நாள்கள் மலேசியாவில் நடைபெறுகிறது. 

மலேசியாவில் போட்டியில் கலந்து கொள்வதற்கு விமான கட்டணம், போக்குவரத்து மற்றும் உணவு தங்குமிடத்திற்கு ரூ.55ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் மாணவரின் குடும்பம் ஏழ்மையில் உள்ளதால் அவனால் அந்த பணத்தை செலுத்திட முடியவில்லை. இதனால் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. 

ஆதலால் மாணவன் ஆரோன் ஜெபஸ் மலேசியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க  நல் உள்ளம் கொண்டவர்கள் உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மாணவனுக்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு உதவிகள் செய்ய வேண்டும் என மாணவன் மற்றும் சக மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

கர்ணராஜ்Nov 9, 2019 - 07:50:48 PM | Posted IP 108.1*****

டயோசீஸோன்ல சொன்ன உடனடி உதவி கிடைக்கும்

நான் சொல்வது உண்மைதான்Nov 9, 2019 - 01:43:04 PM | Posted IP 162.1*****

விகாஷா போன்ற பணக்கார தொழிலதிபர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் படித்தால் ஈஸியா வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போவாங்க, ஆனால் அரசு அல்லது சாதாரண பள்ளியோ இந்த நிலைமை.. அவரும் மாணவர் தானே பிற பள்ளிகள் பண உதவி செய்வார்களோ ??? பணம் மட்டும் தான் குறிக்கோள்... அணைத்து பள்ளிகளும் சேர்ந்து எப்படியாவது மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் ...

மக்கள்Nov 9, 2019 - 11:28:06 AM | Posted IP 108.1*****

பள்ளிக்கூடம் சார்பில் அனுப்பலாமே

சாமான்யன்Nov 8, 2019 - 07:51:11 PM | Posted IP 162.1*****

சாத்தான்குளம் பஜாரில் தண்டலாம். மலேசியா தானே!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory