» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏற்றுமதி இறக்குமதியில் ஆட்சியாளருக்கு அதிகாரம் இல்லை : விவி நிர்வாகம் விளக்கம்

வெள்ளி 8, நவம்பர் 2019 7:16:14 PM (IST)

ஏற்றுமதி இறக்குமதிக்கும் மாவட்ட ஆட்சியாளருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என விவி டைட்டானியம் நிர்வாக பொது மேலாளர் பொன்சேகர் விளக்கமளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி இல்மனைட் இறக்குமதி செய்ததாக விவி டைட்டானியம் நிர்வாகத்தின் மீதும் நிறுவனத்தின் மீதும் கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அந்த நிறுவன பொது மேலாளர் பொன்சேகர் கூறியதாவது.ஏற்றுமதி இறக்குமதிக்கும் மாவட்ட ஆட்சியாளருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இறக்குமதி செய்து வேறு பொருள் உற்பத்தி செய்ய உபயோகிப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என விதிகளில் தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே கனிமங்கள் இறக்குமதிக்கு தமிழக அரசின் விதிகளே பொருந்தாது என தெளிவாக  தீர்ப்பளித்துள்ளது. அந்த வழக்கில் ஒரு மாவட்ட ஆட்சியரும் பிரதிவாதி. அவருக்கும் இந்த நிலை தெரியும். நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இல்மனைட் இறக்குமதி செய்து வருகிறோம். இறக்குமதி செய்யப்பட்ட இல்மனைட் விபரங்களை மாவட்ட ஆட்சியருக்கும், சார் ஆட்சியருக்கும் பதிவு தபாலில் தெரியப்படுத்தி வருகிறோம்.

இதனை உபயோகிக்கவில்லை என்றால் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் 700 தொழிலாளர்களின் பணி பாதிப்பு அடையும். நாங்கள் சரக்கு கொடுக்க வேண்டிய நபர்கள் பாதிப்பு அடைவார்கள். சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி கொள்முதல் செய்யப்பட்ட இல்மனைட்டிற்கு இறக்குமதி வரியாக மட்டும் 75 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும் இந்த வேண்டதகாத நடவடிக்கைகளால் கப்பல் கம்பெனி, லாரி போக்குவரத்து, ஏற்றி இறக்குதல், காலதாமதம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 

தற்போது கிராம நிர்வாக அலுவலரை வைத்து இந்த புகாரை கொடுத்துள்ளார்கள். கனிமங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு கனிம சட்டமே பொருந்தாது என்பதை இந்திய அரசு தெரியப்படுத்தி உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி அன்னிய வாணிப சட்டப்படி நடைபெறும் ஒரு செயல். அந்த சட்டப்படி எந்த மாநில அரசு அதிகாரிகளுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரியப்படுத்தி உள்ளது. 

அதேபோல் கனிம சட்டம் பிரிவு 4(1-எ) படி கனிம போக்குவரத்திற்கு விதிகள் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் தமிழக அரசு தெரியப்படுத்தி உள்ளது. மேலும் கனிம சட்டப்படியும் கூட மாவட்ட ஆட்சியர் தான் நீதிமன்றத்தில் தனி புகாராக தாக்கல் செய்யலாம். இதனையும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

தற்போது இந்தியாவில் தற்போது இரண்டே இரண்டு டைட்டானியம் நிறுவனங்கள் தான் உள்ளன. ஒன்று கேரளாவில் திருவாங்கூர் டைட்டானியம் மற்றொன்று தமிழ்நாட்டின் விவி டைட்டானியம் நிறுவனம் ஆகும். உலக டைட்டானியம் மார்க்கெட்டில் ஏகபோக கோலோச்சுவதற்காக சில அன்னிய நிறுவனங்கள் இங்குள்ள சில சமூக விரோதிகளையும் சில அதிகாரிகளையும் உபயோகித்து இவ்வாறான தவறான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது.

இது பற்றி நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்ய உத்தரவிடுவதோடு இம்மாதிரி தவறு செய்யும் அலுவலர்கள் மீது மத்திய புலனாய்வு துறை மூலம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்க உள்ளோம் என கூறினார்.


மக்கள் கருத்து

செல்வேந்திரன்Nov 11, 2019 - 02:20:03 PM | Posted IP 108.1*****

தமிழ் நாடு சட்டம் செல்லாத . இந்த அரசு வேஸ்ட்

publicNov 11, 2019 - 11:48:15 AM | Posted IP 108.1*****

இப்படி பல கதைகளை சொல்லி ஸ்டெர்லைட் மூடுனாங்க

தமிழ்ச்செல்வன்Nov 9, 2019 - 10:41:25 AM | Posted IP 173.2*****

கனிமங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு கனிம சட்டமே பொருந்தாது என்பது அரசின் கையாலாகாததானம். மொத்தத்தில் பணக்காரனுக்கு இந்தியாவில் எந்த சட்டமும் பொருந்தாது என்பது எங்களுக்கு தெரியாதா? நடத்துங்கடா! நடத்துங்க!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory