» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு: பெண் விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு

வெள்ளி 8, நவம்பர் 2019 5:46:50 PM (IST)தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான பெண் விண்ணப்பதாரர்களுக்கான முதற்கட்ட உடல் தகுதி தேர்வு இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2641 விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வான உயரம் மற்றும் மார்பளவு அளத்தல், குறிப்பிட்ட கால அளவிலான ஓட்டம் போன்ற முதல் கட்ட தேர்வான உடல் ஆற்றல் தேர்வு 6ம் தேதி முதல் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான 6ம் தேதி 950 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்ட தேர்வான உடல் ஆற்றல் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர், அதில் 688 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் நாளான (நேற்று) 7ம் தேதி 938 ஆண் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர், அதில் 638 பேர் தகுதி பெற்றுள்ளனர். முதற்கட்ட உடல் ஆற்றல் தேர்வில் 1326 ஆண் விண்ணப்பதாரர்களும், 441 பெண் விண்ணப்பதாரர்களும் மொத்தம் 1767 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று 753 பெண் விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இன்று அந்தப் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதற்கட்ட உடல் தகுதி தேர்வான உயரம் அளத்தல் மற்றும் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 விநாடிகளில் ஓடுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில் 441 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். ரயில்வே ஐ.ஜி ஏ. வனிதா, சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி ஆசியம்மாள், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இவர்களில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு நீளம் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம், பெண் விண்ணப்பதாரர்களுக்கு நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எரிதல் அல்லது குண்டு எரிதல் மற்றும் 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் போன்ற இரண்டாம் கட்ட உடல் திறனாய்வுத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். 06.11.2019 அன்று உடல் ஆற்றல் தேர்வில் தகுதி பெற்ற 688 விண்ணப்பதாரர்களுக்கு நாளையும் (09.11.2019), நேற்று (07.11.2019) நடைபெற்றதில் தகுதி பெற்ற 638 பேருக்கு 11.11.2019 அன்றும், இன்று (08.11.2019) நடைபெற்றதில் தகுதி பெற்ற 441 பெண் விண்ணதாரர்களுக்கு 12.11.2019 அன்றும் இரண்டாம் கட்டமான உடல் திறனாய்வு தேர்வு நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory