» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது

வெள்ளி 8, நவம்பர் 2019 4:43:41 PM (IST)

தூத்துக்குடி அருகே விவசாயியிடம் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி விக்டோரியா தெருவைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ரோலன் (56), இவர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக உள்ளார். இவரிடம் கீழ வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுந்தர் என்பவர் கோழி மற்றும் ஆட்டுப் பண்ணை அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தாராம். ஆனால், ரூ.5ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்குமுடியும் என அதிகாரி ரோலன் கூறினாராம். இதையடுத்து சுந்தர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பத்துறை அலுவலகத்தில் செய்தார். 

புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து டிஎஸ்பி ஹெக்டர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையம் அங்கு சென்று, சுந்தரிடம் ரசாயனம் தடவிய ரூ.5ஆயிரம் பணத்தை கொடுத்து தீயணப்பு அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். ரோலன் லஞ்ச பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory